முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 199
உ. தாமரைச்செல்வி
1981. நெடும்புனல்
இலக்கியம், கல்வி, கவிதை, சமூகம், திரை போன்ற தலைப்புகளில் பல்வேறு படைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.
1982.பக்தி மற்றும் சுலோகங்கள்
இந்து சமயம் சார்ந்த ஆன்மிகத்தகவல்கள் மற்றும் சுலோகங்கள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
1983. கொஞ்சம் லவ்வு! கொஞ்சம் லொள்ளு!
வலைப்பதிவர் காதல் குறித்த பல்வேறு தகவல்களை இங்கு இடம் பெறச் செய்து வருகிறார்.
1984.கவிதை வானம்
வலைப்பதிவரின் உணர்வுகளாக இங்கு பல்வேறு தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
1985. அம்பராத்தூணி
வலைப்பதிவர் கட்டுரை, கவிதை மற்றும் பல்வேறு தலைப்புகளிலான செய்திகளை இங்கு இடம் பெறச் செய்து வருகிறார்.
1986. சுபத்ரா பேசுறேன்..
கவிதைகள், கட்டுரைகள் எனும் தலைப்புகளில் வலைப்பதிவரின் படைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.
1987. பிரபஞ்சப்ரியன்
இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் குறித்த பல்வேறு தகவல்களை இந்த வலைப்பூவில் அதிகம் காணமுடிகிறது.
1988.மாலை தென்றல்
வரலாறு, கணினி, பெண்கள் நலம், பாலியம் கல்வி, சுற்றுலா, நாட்டுநடப்புகள் என்பது போன்ற பல்வேறு வகைப்பாடுகளில் பல்வேறு தகவல்கள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
1989. வெற்றி நிச்சயம்...!
அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுக்கு உதவக்கூடிய பொது அறிவுத் தகவல்கள் இங்கு தொகுத்துத் தரப்பட்டு வருகின்றன.
1990. கட்டு சேவல்
தமிழர்களின் வீர விளையாட்டான கட்டு சேவல் விளையாட்டுக்கான சேவல் வகைகள், வளர்ப்பு முறைகள், பயிற்சி அளிக்கும் முறைகள், பச்சி பலன்கள், சேவல் படங்கள் எனும் தலைப்புகளில் பல்வேறு தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.