முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 200
உ. தாமரைச்செல்வி
1991. தியானம் - வெற்றி - மன அமைதி
தியானம் மற்றும் அதன் பயன்கள் குறித்த பல்வேறு தகவல்கள் இங்கு இடம் பெற்று வருகின்றன.
1992.முதலியார் சமூகம்
முதலியார் சமூகத்தினரின் முன்னேற்றத்திற்கான பல்வேறு தகவல்கள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
1993. தென்கொங்கு வரலாற்றுச் சுவடுகள்
அகழ்வாராய்ச்சி, கல்வெட்டுகள், இலக்கியம், கலை - பண்பாடுகள், நாணயங்கள் தமிழின் சிறப்பு போன்ற மேலும் சில தலைப்புகளில் பல்வேறு தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன.
1994.தமிழ்நாடு சுற்றுலா
தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு சுற்றுலாத்தலங்கள் குறித்த தகவல்கள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.
1995. உடல் எடையைக் குறைக்க டிப்ஸ்
உடல் எடையைக் குறைக்க ஆலோசனைகளை வழங்கி வந்த இந்த வலைப்பூ தொடர்ந்து புதுப்பிக்கப்படாமல் முடங்கிக் கிடக்கிறது.
1996. அன்புடன் பிஸ்மி
மருத்துவம் மற்றும் சமையல் குறிப்புகளுக்கான இணைப்புகளின் தொகுப்புகள் இங்கு அதிக அளவில் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கின்றன.
1997.கண்ணனுக்காக
மகாபாரதத்தில் வரும் கண்ணன் குறித்த செய்திகள் இங்கு தொடர்ந்து இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
1998.சித்தவைத்தியன்
உணவுப் பொருட்களின் மருத்துவப் பலன்கள், சித்த வைத்தியம் தொடர்பான மருத்துவக் குறிப்புகள் போன்றவை இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
1999. அக்ஷ்ய பாத்ரம்
வலைப்பதிவரின் மனப்பதிவுகள் சுவையாகத் தொகுத்துத் தரப்பட்டு வருகின்றன.
2000. தெய்வீக விளக்கங்கள்
இந்து சமயம் குறித்தும், வழிபாட்டு முறைகள் மற்றும் அதனால் கிடைக்கும் பலன்கள் குறித்தும் பல்வேறு தகவல்கள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.