முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 204
உ. தாமரைச்செல்வி
2031. சக்திவேல் பாலசுப்ரமணியன் - புதிய உலகம் செய்வோம்
ஆன்மிகம், பொதுஅறிவு, பொன்மொழிகள், சுயமுன்னேற்றம், எண்ணங்கள் போன்ற பல்வேறு தலைப்புகளில் பல தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
2032.குழல் இன்னிசை !
வலைப்பதிவர் சிறுகதை, கவிதை, சமூகம் சார்ந்த தகவல்கள் என பல்வேறு தகவல்களை இங்கு பதிவிட்டிருக்கிறார்.
2033. கவியாழி
வலைப்பதிவரான கவிஞர் இங்கு அவரது பல கவிதைகளை பதிவேற்றம் செய்து வருகிறார்.
2034.அழகான வாழ்க்கை
ஆன்மிக அறிவியல், உளவியல், சினிமா மற்றும் பொது எனும் வகைப்பாடுகளில் வலைப்பதிவரின் கருத்துகளைக் காணமுடிகிறது.
2035. கோலங்கள்
கவிதை, மொக்கை, நகைச்சுவை, புகைப்படங்கள் என்று பல்வேறு தலைப்புகளில் பல்வேறு வகையான தகவல்கள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
2036. கலையும் மௌனம்
வலைப்பதிவரின் சமூகம் சார்ந்த சிந்தனைகளும், அனுபவங்களும் இங்கு கட்டுரைகளாக இடம் பெற்றிருக்கின்றன.
2037.ஜெய்பீம்
அம்பேத்கர் குறித்த செய்திகள், அவருடைய கருத்துகள் போன்றவை இங்கு இடம் பெற்று வருகின்றன.
2038.ஒளிரும்பாதை
இந்திய பொது உடமைக் கட்சி (மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட்) அமைப்பின் தகவல்கள் மற்றும் கட்டுரைகள், வெளியீடுகள், விக்கிலீக்ஸ், வரலாற்றுப்பதிவுகள் போன்ற தலைப்புகளில் பல்வேறு செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
2039. தெய்வீக விளக்கங்கள்
இந்து சமயக் கருத்துகள் மற்றும அதற்கான விளக்கங்கள் இந்த வலைப்பூவில் இடம் பெற்று இருக்கின்றன.
2040. சேலம் கவிமதி
வலைப்பதிவர் எழுதிய புதுக்கவிதைகள் இங்கு இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.