முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 205
உ. தாமரைச்செல்வி
2041. கந்தன் துதிப்பாடல்கள்
முருகப்பெருமான் குறித்த பல்வேறு பாடல்கள் குறித்த தகவல்கள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
2042.முட்டாளின் கவிதைகள்
வலைப்பதிவர் இங்கு தன்னை முட்டாளாக அறிமுகப்படுத்திக் கொண்டு பல கவிதைகளை இங்கு பதிவேற்றம் செய்திருக்கிறார்.
2043. அரும்புகள் மலரட்டும்
சினிமா விமர்சனங்கள், பல சுவையான தகவல்கள் இங்கு இடம் பெற்று வருகின்றன.
2044.நிழல்களும்-நிஜங்களும்
வலைப்பதிவர் இங்கு இந்திய அரசியல் செய்திகளை அவருக்கான பார்வையில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
2045. பயனுள்ள தகவல்கள்
இந்த வலைப்பூவில் பல்வேறு துறைகளிலான பல தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன.
2046. இயற்கை விவசாயம்
இயற்கை விவசாயம் குறித்த பல்வேறு தகவல்கள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
2047.காவல் மறுமலர்ச்சி
காவலதுறை குறித்த செய்திகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பற்றிய சிறப்புத் தகவல்கள் போன்றவை இங்கு இடம் பெற்று வருகின்றன.
2048.தமிழ் வம்பன்
சினிமானந்தா பதில்கள், நட்சத்திர சந்திப்பு, இருள் உலகக் கதைகள் போன்ற பல தலைப்புகளில் வலைப்பதிவர் பல செய்திகளைப் பகிர்ந்து வருகிறார்.
2049. கதை வீதி
சிறுகதை எழுத்தாளரான வலைப்பதிவர் தனது சிறுகதைகளை இங்கு பதிவேற்றம் செய்து வருகிறார்.
2050. வரலாறு
இந்திய, இலங்கை வரலாறு, தொல்லியல் மற்றும் பிற துறைகள் சார்ந்த கட்டுரைகள், படங்கள் இங்கு இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.