முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 206
உ. தாமரைச்செல்வி
2051. உயிர்த்தமிழ்
வலைப்பதிவர் தன்னுடைய பல்வேறு கவிதைகளை இங்கு பதிவேற்றம் செய்து வருகிறார்.
2052.உஷாதீபன்
எழுத்தாளர் உஷாதீபன் தனது படைப்புகளையும், கருத்துக்களையும் இந்த வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறார்.
2053. கவிதை கட்டுரை சிறுகதை
இந்த வலைப்பூவில் பெரும்பான்மையாகக் கவிதைகள், இடையிடையே கட்டுரை, கதைகளும் இடம் பெற்றிருக்கின்றன.
2054.கடை(த்)தெரு
வலைப்பதிவர் பல்வேறு சமூகப் பிரச்சனை குறித்த பார்வைகளுடன் சில திரைப்படம் தொடர்புடைய கருத்துகளையும் இங்கு தெரிவித்திருக்கிறார்.
2055.சித்திரவீதிக்காரன்
மதுரை மாநகர் மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளைப் பற்றிய சுவையான செய்திகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
2056. மாலை தென்றல்
நாஞ்சில் நாடு எனும் கன்னியாகுமரி மாவட்டம் குறித்த பல்வேறு செய்திகளுடன் உடல்நலம், அழகுக்குறிப்புகள் போன்ற பிற தகவல்களும் இடம் பெற்றிருக்கின்றன.
2057.கொங்கு கல்வெட்டு ஆய்வு
கொங்கு மண்டலத்திலான கல்வெட்டு ஆய்வுகள் குறித்த தகவல்கள் இங்கு பதிவு செய்யப்பெற்று வருகின்றன.
2058. நாகேந்திர பாரதி
தொழில்முறைப் பேச்சாளரான வலைப்பதிவர் தனது மேடைப் பேச்சுக்களையும், கருத்துகளையும் கட்டுரைகளாக இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
2059. மதுரை மாநகரம்
மதுரை மாநகரம் குறித்த பல்வேறு தகவல்கள் படங்களுடன் இடம் பெற்றிருக்கின்றன.
2060. சாகாக்கல்வி
வள்ளலார் பற்றிய தகவல்கள், அவர்தம் கருத்துகள் போன்றவை இங்கு இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.