முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 209
உ. தாமரைச்செல்வி
2081. கங்கைக்கரை தோட்டம்
இந்த வலைப்பூவில் கங்கை அமரனின் பாடல்கள், நேர்காணல்கள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன.
2082.உதயம் மலர்
பல்சுவைத் தகவல்கள் இந்த வலைப்பதிவில் இடம் பெற்றிருக்கின்றன.
2083. பட்டதும் சுட்டதும்
இந்த வலைப்பூவில் பல்சுவைத் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
2084.என் மன வானில்…
அரசியல், கடவுள், கதைகள், கலாச்சாரம், சித்தாந்தம், சினிமா, நகைச்சுவை போன்ற தலைப்புகளில் செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
2085.நிலாப்பாட்டு
வலைப்பதிவர் தனக்குப் பிடித்த பாடல்களை இங்கு பதிவேற்றம் செய்து வருகிறார். பாடல் எழுத்து வடிவில் வழங்கப்பட்டிருப்பதுடன், தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டிருக்கின்றன.
2086. என்றும் ஒரு தகவல்
வலைப்பதிவர் தான் அச்சிதழ்களில் படித்த பல்வேறு தகவல்களை இங்கு பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறார்.
2087.திருக்குறள் பக்கம்
திருக்குறள் குறித்து வலைப்பதிவரின் விளக்கம் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
2088. எழுத்துப் பிழை
இங்கு வலைப்பதிவர் பல சிறுகதைகளைப் பதிவேற்றம் செய்திருக்கிறார்.
2089. கண்ணனுக்காக
மகாபாரதக் கதைகள் இங்கு தொகுத்துத் தரப்பட்டு வருகின்றன.
2090.குறும்படம் எடுக்கலாம் வாங்க...!
குறும்படம் எடுப்பது குறித்த பல்வேறு தகவல்கள் மற்றும் ஆலோசனைகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.