முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 219
உ. தாமரைச்செல்வி
2181.எளிய மகிழ்ச்சியான வாழ்க்கை உருவாக்குநர்
வலைப்பதிவர் தன்னம்பிக்கையூட்டும் பல்வேறு செய்திகளை இந்த வலைப்பூவில் பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறார்.
2182.அறுசுவை அறுவை
வலைப்பதிவர் தான் படித்த கதைகள், கவிதைகள், கட்டுரைகள் போன்றவற்றை இங்கு பதிவு செய்து வருகிறார்.
2183.எண்ணத் தூரிகை
அம்மா, அன்பதிகாரம், அன்னைதுதி, ஆரோக்கியம், இயற்கை, எண்ணச்சிதறல்கள், கட்டுரை, கண்ணன், காதல், சுந்தரி, தத்துவம், தாய்மை, தோழமை, மழலை, மழை, மனிதம், மீரா, முத்தச்சிதறல்கள், வாழ்வியல், ஸ்ரீயின் குறும்புகள் போன்ற தலைப்புகளில் பல்வேறு செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
2184.சவுந்தியன்
வலைப்பதிவர் பல்வேறு தலைப்புகளில் பல செய்திகளைத் தொடர்ந்து இங்கு பதிவேற்றம் செய்து வருகிறார்.
2185.பெருவெளிப் பெண்
எழுத்தாளர் ச. விஜயலட்சுமியின் கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்று அவருடைய படைப்புகள் அதிக அளவில் இந்த வலைப்பூவில் தொகுத்துத் தரப்பட்டு வருகின்றன.
2186. மழைச்சாரல்
இந்த வலைப்பூவில் கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்று பல்வேறு படைப்புகள் இடம் பெற்று வருகின்றன.
2187.மின்னல்வரிகள்
அனுபவம், நகைச்சுவை, புத்தகம், இலக்கியம், சினிமா, மிக்சர், வலைச்சரம், சினிமா விமர்சனம் போன்ற பல தலைப்புகளில் செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
2188. தமிழ்கவிதைகள்
காதல், அம்மா, இயற்கை, நட்பு போன்ற தலைப்புகளில் அதிக அளவில் புதுக்கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன.
2189. எழிலாய்ப் பழமை பேச...
வலைப்பதிவர் பல்வேறு தலைப்புகளின் கீழ் பல செய்திகளைத் தொடர்ந்து பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறார்.
2190.முனைவர் ஜம்புலிங்கம்
வலைப்பதிவர் தான் சென்ற கோயில்கள் குறித்த முழுமையான தகவல்களை இங்கு பதிவேற்றம் செய்து வருகிறார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.