முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 223
உ. தாமரைச்செல்வி
2221.இசை இன்பம்
இசைப்பாடல்கள், இசைக்கருவிகள், நடன்ம், நாட்டுப்புறப்பாடல், திரைப்படம், தொகுப்பிசை, சுவையான தகவல்கள் என்று இசையுடன் தொடர்புடைய பல்வேறு செய்திகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
2222.வெங்காயம்
இந்த வலைப்பூவில் இந்து சமயம் தொடர்புடைய ஆன்மிகச் செய்திகளும், சுவையான சில தகவல்களும் இடம் பெற்றிருக்கின்றன..
2223.ஆலயம்
இந்த வலைப்பூவில் இந்து சமயம் தொடர்புடைய செய்திகள், ஜோதிடம், மருத்துவம் மற்றும் வேறு சில தகவல்களும் இடம் பெற்றிருக்கின்றன.
2224.தமிழ்க்கவிதை
இங்கு கவிதைகள் மட்டுமில்லாமல் வேறு சில தகவல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
2225.வலிப்போக்கன்
சமூகத்தில் நிலவும் வலிகளுடனான செய்திகளை வலைப்பதிவர் இங்கு பதிவிட்டு வருகிறார்.
2226. சுந்தரநேசங்கள்
இந்த வலைப்பூவில் வலைப்பதிவரின் பல்வேறு தலைப்பிலான கவிதைகள் இடம் பெற்று வருகின்றன.
2227.தோட்டம்
இங்கு தோட்டம் அமைப்பது குறித்த பல்வேறு வேளாண்மைச் செய்திகள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.
2228. வீரா கார்ட்டூன்கள்
வலைப்பதிவர் தனது கார்ட்டூன்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டுமென்று இந்த வலைப்பூவைத் தொடங்கியிருந்தாலும், தொடர்ந்து செய்யவில்லை.
2229. தமிழ் கிறிஸ்தவ சிறுகதைகள்
கிறிஸ்துவின் வழியை பின்பற்றுகிறவர்களை பற்றிய சிறு கதைகள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
2230.தமிழ்தாசன்
வலைப்பதிவர் ஆறுகள், காடுகள், மலைகள் போன்றவைகளைப் பற்றிய செய்திகளுடன் வேளாண்மைச் செய்திகளையும் இங்கு பதிவிட்டிருக்கிறார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.