முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 234
உ. தாமரைச்செல்வி
2331.ஸ்ரீஷகீரதன்
இந்த வலைப்பூவில் இந்து சமயம் தொடர்புடைய தகவல்கள், ஆன்மிகக்கதைகள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன
2332.தமிழர் பண்பாடு
பல்வேறு சுவையான தகவல்கள் இந்த வலைப்பூவில் தரப்பட்டிருக்கின்றன.
2333.ஒரு ஊழியனின் குரல்
சமூகத்தில் இடம் பெற்றிருக்கும் பல்வேறு கருத்துகளை மாற்றிப் புதிய கருத்துகளை இந்த வலைப்பூவின் வழியாக வலைப்பதிவர் சொல்லி வருகிறார்.
2334.கார்த்திக்ராஜாவின் ஆன்மிகச் சேகரிப்புகள்
வலைப்பதிவர் இந்து சமய ஆன்மிகத் தகவல்களை இந்த வலைப்பூவில் தொகுத்துத் தந்து கொண்டிருக்கிறார்.
2335.கருநாடக இசைக் கலைஞர்கள்
கருநாடக இசைக் கலைஞர்கள் வாழ்க்கைக் குறிப்புகள் இங்கு தொகுத்தளிக்கப்பட்டு வருகின்றன.
2336.மதிசூடி துதிபாடி
சிவபெருமான் புகழ் பாடும் பாமாலைகள், பதிகங்கள், (மரபுக் கவிதை) போன்றவை இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
2337.மாந்திரீக மர்மங்கள்
இந்த வலைப்பூவில் மாந்தீரீக மர்மங்கள் குறித்த செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
2338.தஞ்சை தமிழ்ச்செல்வன்
வலைப்பதிவர் தான் படித்த, தெரிந்து கொண்ட பல்வேறு செய்திகளை இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
2339. திருக்குறள்
திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால், அதிகார அகரவரிசை எனும் தலைப்புகளில் குறள், குறளின் விளக்கம், ஆங்கில மொழிபெயர்ப்பு, ஆங்கிலக் கருத்து போன்றவை கொடுக்கப்பட்டிருக்கின்றன.
2340. தமிழ்க்குரல்
வலைப்பதிவர் பகுத்தறிவுச் சிந்தனையுடனான தனது கருத்துகளை இங்கு பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.