முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 237
உ. தாமரைச்செல்வி
2361.எதாவது செய்யனும்
இந்த வலைப்பூவில் சில சமூகச் செய்திகள், சில குட்டிக்கதைகள் என்று இடம் பெற்றிருக்கின்றன.
2362.செவ்வரத்தை
வலைப்பதிவர் தான் படித்த நூல்கள் குறித்த செய்திகள், சமூகச் செய்திகள் போன்றவைகளை இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
2363.கலையகம்
இந்த வலைப்பூவில் இலங்கைத் தமிழர்கள் குறித்த பல்வேறு செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
2364.தமிழ் நகைச்சுவை
பல்வேறு தலைப்புகளில் இங்கு நகைச்சுவைகள் தரப்பட்டிருக்கின்றன.
2365.பிதாவின் கதைகள்
இங்கு நீதிக்கதைகள் மற்றும் நல்வழிகாட்டும் செய்திகள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன.
2366.வேல்தர்மா
அரசியல், அனுபவம், ஆய்வுகள் மற்றும் பல்வேறு தலைப்புகளில் பல்வேறு செய்திகள் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றன.
2367.மௌன தேசம்.
இந்த வலைப்பூவில் சினிமா, சமூகம், ஜோக்ஸ், நகைச்சுவை போன்ற தலைப்புகளில் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
2368.ஓஷோவின் மனமற்ற நிலை
ஓஷோவின் பல்வேறு தலைப்பிலான கதைகள், கருத்துகள் போன்றவை இங்கு தரப்பட்டு வருகின்றன.
2369. தமிழ் தத்துவங்கள்
சிரிக்க சிந்திக்க, சிந்திக்க சில கதைகள், சிரித்திருக்க, ஆன்மிகம், தமிழ் மருத்துவம் எனும் தலைப்புகளில் சுவையான தகவல்கள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
2370. வாய்மொழி கதைகள்
இந்த வலைப்பூவில் பல்வேறு தலைப்புகளிலான குட்டிக்கதைகள் இடம் பெற்று இருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.