முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 239
உ. தாமரைச்செல்வி
2381.வேய்ங்குழல்
இந்த வலைப்பூவில் தமிழ் மொழி தொடர்புடைய செய்திகள், தமிழ் மொழியின் சிறப்புகள் போன்றவை தொடர்ந்து தரப்பட்டு வருகின்றன.
2382.பேரன்ட்ஸ் கிளப்
இந்த வலைப்பூவில் பெற்றோர்களுக்கான பல்வேறு பகிர்தல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
2383.எனது பயணம்
வலைப்பதிவர் கட்டுரை, சங்க இலக்கியம் சிறுகதை, தமிழ் என்பது போன்ற பல்வேறு தலைப்புகளில் பல செய்திகளை இங்கு திரட்டித் தந்து கொண்டிருக்கிறார்.
2384.தமிழ் வலை
வலைப்பதிவர் பல்வேறு தலைப்பிலான செய்திளை இங்கு பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறார்.
2385.யானை
வலைப்பதிவர் பல்வேறு இதழ்களில் வெளியான தனது படைப்புகளை இங்கு பகிர்ந்து கொண்டு வருகிறார்.
2386.பிரபஞ்சக்குடில்
இந்த வலைப்பூவில் பல்வேறு தலைப்புகளிலான கட்டுரைகள், செய்திகள் என்று பல்சுவைத் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
2387.ஐயப்பன்.
ஐயப்பன் வரலாறு, கோயில் வரலாறு, வழிபாட்டு முறைகள், கோயிலுக்கும் செல்லும் வழிகள் என்று முழுக்க முழுக்க ஐயப்பன் குறித்த பல தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
2388.துரை.பொன்னுசாமி
புலவர் துரை. பொன்னுச்சாமியின் படைப்புகளான குழந்தைப்பாடல்கள், சிற்றிலக்கியம், நீதிநூல்கள், பக்திப்பாமாலை, அனுபவ அக்ராதி போன்றவை இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
2389. தமிழ் இல்லம்
பொன்மொழிகள், பாட்டி வைத்தியம், இயற்கை மருத்துவம் மற்றும் சில செய்திகள் இங்கு தரப்பட்டு வருகின்றன.
2390. உணவே மருந்து
சமையல் செய்முறைகள், மூலிகைகள் மற்றும் மூலிகை வைத்தியம் இங்கு சொல்லிக் கொடுத்து வருகிறார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.