முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 240
உ. தாமரைச்செல்வி
2391.அறிவின் பாதை
கணினி மற்றும் இணையம் தொடர்புடைய பல்வேறு தொழில்நுட்பத் தகவல்கள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.
2392.சுமியின் கிறுக்கல்கள்
வலைப்பதிவரின் சினிமாச் செய்திகள், நாலாயிரத் திவ்யப்பிரபந்தம், ஆன்மிகத் தகவல்கள் போன்றவைகளுடன் வேறு சில தகவல்களும் இடம் பெற்று வருகின்றன.
2393.வாசனின் வாசகம்
ஆன்மிகம், சமையல் குறிப்புகள், பொதுத்தகவல்கள் போன்ற தலைப்புகளில் அதிகமான தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன.
2394.தளிர்
செய்திகள், ஆன்மிகம், சிறுவர்பகுதி, ஜோக்ஸ், கவிதை என்று பல்வேறு தலைப்பிலான தகவல்கள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
2395.தொப்புள்கொடி
வலைப்பதிவர் கவிதை, அனுபவம், குட்டிக்கதைகள் என்று பல்வேறு செய்திகளை இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
2396.ஆழ்கடல் களஞ்சியம்
இந்த வலைப்பூவில் பல்வேறு தலைப்புகளில் பல்வேறு சுவையான செய்திகள், கட்டுரைகள், பொன்மொழிகள், அழகுக்குறிப்புகள், இயற்கை மருத்துவக் குறிப்புகள் என்று பல்சுவைத் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
2397.கல்வி அமுது
கல்வி தொடர்புடைய பல்வேறு செய்திகள், ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் போன்றவை இங்கு இடம் பெற்று வருகின்றன.
2398.நீதியின் குரல்
இந்த வலைப்பூவில் பல்வேறு அரிய தகவல்கள் மற்றும் இசுலாமியச் செய்திகள் போன்றவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
2399. சாளரம்
புட்டிக்கதைகள், சிறுகதைகள், தோழிகளின் அப்டேட்ஸ் போன்ற தலைப்புகளில் பல்வேறு செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
2400. புதியவன் பக்கம்
வலைப்பதிவர் பல்வேறு தலைப்புகளிலான கட்டுரைகளை விரிவாக எழுதிப் பதிவேற்றம் செய்திருக்கிறார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.