முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 244
உ. தாமரைச்செல்வி
2431.கொங்கு கல்வெட்டு ஆய்வு
கொங்கு மண்டலப் பகுதியில் கிடைத்த பல்வேறு கல்வெட்டுக்கள் குறித்த செய்திகள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.
2432.ஆண்டவன் படைச்சான் … என் கிட்ட கொடுத்தான்…
அரசியல், கவிதை, குட்டிக்கதைகள், சினிமா, செய்திகள் அப்படின்னு சில தலைப்புகளில் பல தகவல்கள் இடம் பெற்று வருகின்றன.
2433.என் சமையலறை
வலைப்பதிவர் இங்கு பல்வேறு சமையல் செய்முறைக் குறிப்புகளைப் பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறார்.
2434.காகிதப்பூக்கள்
பல்வேறு தலைப்புகளிலான சுவையான செய்திகளை வலைப்பதிவர் இங்கு இடம் பெறச் செய்து வருகிறார்.
2435.இனி எல்லாம் இயற்கையே
உடல் நலத்திற்கான இயற்கைச் சூழல்கள், இயற்கை உணவுகள் போன்றவை இங்கு இடம் பெற்று வருகின்றன.
2436.டிசிபிள் மினிஸ்ட்ரி
பல்வேறு சிறுதொழில் செய்வதற்கான குறிப்புகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
2437.அஜீஸ்
இஸ்லாம், கட்டுரைகள், கணினி, கல்வி - வேலை, கவிதைகள், கைபேசி, சமையல் போன்ற சில தலைப்புகளில் செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
2438.வைணவம் குறித்த பார்வை.
வைணவம் குறித்த செய்திகள், ஆழ்வார்கள் பற்றிய தகவல்கள் என வைணவம் தொடர்புடைய பல்வேறு தகவல்கள் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
2439. மருத்துவம், மருத்துவக் குறிப்புகள், முலிகை மருத்து
இயற்கை மருத்துவக் குறிப்புகள், மூலிகைகள் குறித்த செய்திகள் போன்றவை இங்கு அதிகமாகப், பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
2440. பவித்ரா நந்தகுமார்
வலைப்பதிவர் தன்னுடைய படைப்புகள், அனுபவங்கள் போன்றவைகளை இங்கு பதிவேற்றம் செய்து வருகிறார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.