முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 247
உ. தாமரைச்செல்வி
2461.கமகம்
கர்நாடக இசை குறித்த பல்வேறு செய்திகள் சிறிய கட்டுரைகளாக இடம் பெற்றிருக்கின்றன.
2462.தர்மத்தின் பாதையில்
இந்து சமயம் குறித்த பல்வேறு செய்திகள், ஜோதிடம், சமஸ்கிருதம் பயிற்சி போன்றவை இங்கு இடம் பெற்று வருகின்றன.
2463.நேர்மறைச் சிந்தனைகளின் கிரியா ஊக்கி..!
சுயமுன்னேற்றம் குறித்த தகவல்கள், உளவியலடிப்படையிலான தகவல்கள் போன்றவை இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
2464.அந்திபடும் நினைவுகள்
வலைப்பதிவர் தான் படித்த, பல்வேறு செய்திகளையும், அனுபவங்களையும் இங்கு கட்டுரைகளாகவும், கவிதைகளாகவும் பதிவேற்றம் செய்திருக்கிறார்.
2465.நடுவூர்க்கரை
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பேரூராட்சியின் ஒரு பகுதியாக இருக்கும் நடுவூர்க்கரை குறித்த செய்திகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
2466.சிவபெருமான் சித்தர்
சிவபெருமான் குறித்த பல்வேறு செய்திகள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
2467.மூன்றாம் கண்
இந்து சமயத் தகவல்கள், தியானம், யோகா உள்ளிட்ட பல்வேறு செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
2468.சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்
சினிமாவினால் சமூகத்தில் ஏற்படும் பல்வேறு சீரழிவுகள், தீமைகள் குறித்த செய்திகளைக் கொண்ட கட்டுரைகள் அதிகமாக இடம் பெற்று வருகின்றன.
2469. காலத்தின் தேடல்கள்
வலைப்பதிவர் கவிதை, சிறுவர் பாடல், கட்டுரைகள், கவித்துளிகள், சிறுகதைகள், நேர்காணல்கள் போன்ற பல்வேறு தலைப்புகளில் பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறார்.
2470. அய்யா வைகுன்டரின் இனிமம்
அய்யா வைகுண்டர் வரலாறு, அவரது ஆன்மிகச் செய்திகள், வழிபாட்டு முறைகள் போன்ற பல்வேறு செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.