முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 253
உ. தாமரைச்செல்வி
2521.கல்வி உலகம்
இந்த வலைப்பூவில் மெய்யியல், அரசறிவியல் எனும் தலைப்புகளில் பள்வேறு கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன.
2522.வேட்டொலி
இந்த வலைப்பூவில் தமிழர் குறித்த செய்திகளும், அரசியல் செய்திகளும் அதிகளவில் இடம் பெற்று வருகின்றன.
2523.தந்துகி
வலைப்பதிவர் கவிதை, சிறுகதை போன்ற தலைப்புகளில் படைப்புகளையும், இவை தவிர்த்து நூற்றுக்கணக்கான தலைப்புகளில் பல்வேறு செய்திகளையும் பதிவு செய்து கொண்டிருக்கிறார்.
2524.விழித்தெழு இளைஞர் இயக்கம்
இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்த செய்திகள் அதிக அளவில் இடம் பெற்று வருகின்றன. வேறு சில செய்திகளும் இடம் பெற்றிருக்கின்றன.
2525.தென்றல்
வலைப்பதிவர் பல்வேறு தலைப்புகளிலான தனது கவிதைகளை இங்கு பதிவேற்றம் செய்திருக்கிறார்.
2526.பகிர்ந்து கொள்வோம்!!
இந்த வலைப்பூவில் வலைப்பதிவர் தான் படித்த பல்வேறு பொது அறிவுத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டு வருகிறார்.
2527.இயற்கை மருத்துவ ரகசியங்கள்
இயற்கை மருத்துவம், யோகாசனம், ஆன்மிகம் போன்ற முதன்மைத் தலைப்புகளில் பல்வேறு செய்திகள், கட்டுரைகள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.
2528.அம்மன் பாட்டு
இந்த வலைப்பூவில் அம்மன் பாட்டுகள் பல பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. பல பாடல்களை இங்கு கேட்கவும் முடிகிறது.
2529. கடற்கரை
தொழில்நுட்பம், அறிவியல் தகவல்கள், ஜிமெயில் ரகசியங்கள் உள்ளிட்ட தலைப்புகளில் பல செய்திகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
2530. நளியிரு முந்நீர்
இந்த வலைப்பூவில் பல்வேறு வகையான மீன், நண்டுகள் குறித்த செய்திகள் படங்களுடன் தரப்பட்டிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.