முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 287
உ. தாமரைச்செல்வி
2861.ஓஷோ
ஓஷோவின் ஆன்மிகச் செய்திகள், அவ்ர் சொன்ன வழிமுறைகள் போன்றவை இங்கு இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
2862.சமுத்ரா - வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...
வலைப்பதிவர் கலைடாஸ்கோப் எனும் தலைப்பில் பல்வேறு செய்திகளை இங்கு நல்ல விளக்கத்துடன் தெரிவிக்கிறார். மேலும் பல செய்திகளையும் இங்கு காணமுடிகிறது.
2863.முனைவர் ஆ.மணி
இந்த வலைப்பூவில் வலைப்பதிவர் தமிழ் மொழி தொடர்புடைய பல்வேறு தகவல்களைப் பதிவேற்றம் செய்து வருகிறார்.
2864.தமிழ்ப் புத்தகம்
தமிழ் மொழியிலான புத்தகங்களைப் பற்றிய செய்திகள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.
2865.செந்தமிழ்க்கல்லூரி மதுரை
மதுரை செந்தமிழ்க்கல்லூரியின் வலைப்பூ இது. கல்லூரிச் செய்திகள் இங்கு அவ்வப்போது பதிவேற்றம் செய்யப்பெற்றுள்ளது.
2866.தேசமே தெய்வம்
இந்த வலைப்பூவில் ஆழ்வார்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள், தேசியத் தலைவர்கள், தமிழகத் தலைவர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் என்று குறிப்பிடத்தக்க நபர்களைப் பற்றிய செய்திகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
2867.கம்பன் கழகம் காரைக்குடி
இந்த வலைப்பூவில் காரைக்குடியிலிருக்கும் கம்பன் கழகத்தின் செய்திகள் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கின்றன.
2868.இலக்கியச் சுற்றம்
வலைப்பதிவர் பல்வேறு தலைப்புகளிலான செய்திகளை இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
2869.கவிஞர் தவம்
இந்த வலைப்பூவில் வலைப்பதிவர் தனது கவிதை மற்றும் கதைகளைப் பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறார்.
2870.சைவசித்தாந்தம்
இந்த வலைப்பூவில் இந்து சமயத்தின் சைவசித்தாந்தக் கருத்துகள் அதிக அளவில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.