முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 294
உ. தாமரைச்செல்வி
2931.குவைத் குயில்
குவைத் பற்றிய பல்வேறு தகவல்கள், பல்சுவையான செய்திகள் போன்றவை இங்கு இடம் பெற்று வருகின்றன.
2932.ரெங்கசுப்ரமணி
வலைப்பதிவர் தான் படித்த நாவல், சிறுகதை போன்றவைகளைப் பற்றிய குறிப்புகளை இங்கு பதிவிட்டு வருகிறார்.
2933.அனுவின் தமிழ் துளிகள்.....
இந்து சமய ஆன்மிகக் கருத்துகள், கோயில்களைப் பற்றிய செய்திகள் போன்றவை இங்கு இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
2934.வாய்மொழி கதைகள்
வாய்மொழியாகச் சொல்லப்பட்டு வரும் நாட்டுப்புறக் கதைகள் இங்கு இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
2935.ஒரு துளி பிரபஞ்சம் ...
வலைப்பதிவர் தான் படித்த நூல்கள், கதைகள், கட்டுரைகளைப் பற்றிய விமர்சனங்களையும், தன்னுடைய படைப்புகளையும், பயணங்களையும் இங்கு தந்து கொண்டிருக்கிறார்.
2936.யோகியின் தேடல்கள்....
வலைப்பதிவரின் அனுபவங்கள் மற்றும் படைப்புகளுடன் அவரது நேர்காணல்களும் பதிவேற்றம் செய்யப் பெற்றிருக்கின்றன.
2937.108 திவ்ய தேசம்
108 வைணவக் கோயில்கள் பற்றிய தகவல்கள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
2938.இன்றைய வானம்
இந்த வலைப்பூவில் பல்வேறு அரிய செய்திகள் அருமையாகத் தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றன.
2939.த ர் க் க ம்
வலைப்பதிவர் பல்வேறு செய்திகளை தர்க்க ரீதியாக அணுகி, அது பற்றிய தொகுப்பை இங்கு பதிவேற்றிக் கொண்டிருக்கிறார்.
2940.திரைக்கதம்பம்
திரைப்படக் குறுக்கெழுத்துப் புதிர்கள் இங்கு இடம் இடம் பெற்று வருகின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.