முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 296
உ. தாமரைச்செல்வி
2951.வழி காட்டும் வைணவம்
இந்து சமயத்தின் உட்பிரிவான வைணவ சமய ஆன்மிகச் செய்திகள், கோயில்கள் போன்றவை இங்கு இடம் பெற்று வருகின்றன. வலைப்பதிவர் வேறு சில தகவல்களையும் இங்கு பதிவிட்டு வருகிறார்.
2952.பாரதி மணி பக்கங்கள்
வலைப்பதிவரின் அனுபவங்கள், வலைப்பதிவரைப் பற்றி நண்பரின் செய்திகள் போன்றவைகளுடன் பல்வேறு சுவையான செய்திகளும் இடம் பெற்றிருக்கின்றன.
2953.பண்பாட்டுக் கோலங்கள்
வலைப்பதிவரது நிகழ்வுகள், அனுபவங்கள் போன்றவற்றுடன் அவரது பண்பாடு பற்றிய கருத்துகளும் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
2954.பிரபுஆர்
இந்த வலைப்பூவில் பல்வேறு சுவையான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
2955.அறிந்தவற்றை பகிர்ந்திட...!!!
பயனுள்ள தகவல்கள், தகவல் தொழில்நுட்பம், இசுலாம், உளவியல், ஊக்கப்படுத்தல் போன்ற சில தலைப்புகளில் இங்கு தகவல்கள் தரப்பட்டு வருகின்றன.
2956.மலரும் தேசம்
மகான்கள், அறிஞர்கள் மற்றும் தலைவர்கள் சொன்ன பொன்மொழிகள் இங்கு பதிவேற்றம் செய்யப் பெற்றிருக்கின்றன.
2957.நவயுகம்
இங்கு படிப்பினைக் குறிப்புக்கள், வரலாறு, விந்தை உலகம், பொதுஅறிவு, மருத்துவம், கணணி, பொதுவானவை, இஸ்லாம், சாதனைகள், தொழில்நுட்பம், சிந்தனைத் துளிகள் போன்ற தலைப்புகளில் பல்வேறு செய்திகள் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கின்றன.
2958.இனியவை கூறல்
இந்த வலைப்பூவில் கதைகள், துணுக்குகள், அறிந்து கொள்வோம், வினோதங்கள் போன்ற தலைப்புகளில் தகவல்கள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
2959.வால் பையன்
பல்வேறு தலைப்புகளில் பல்வேறு சுவையான செய்திகள் தரப்பட்டிருக்கின்றன.
2960.என் எழுத்து
வலைப்பதிவர் இயன்ற அளவு இலகு தமிழில் இயற்பியலையும், அறிவியலையும் தமிழ் இளைஞர்களுக்குக் கொண்டு சேர்க்க விரும்பிய தகவல்கள் இடம் பெற்றிருக்கிறது. ஆனால், ஏனோ தொடர்ந்து செய்யாமல் முடங்கிக் கிடக்கிறது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.