தெரியுமா? தெரியுமா?

ஒரு அங்குலம் மழை பெய்தது என்கிறார்கள். இதன் பொருள் என்ன தெரியுமா? ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 112 டன் எடையுள்ள நீர் கொட்டியுள்ளது என்பதுதான் இதன் பொருள்.

நத்தை வேகம், ஆமை வேகம் என்கிறார்களே...? இதன் வேகம் எப்படி என்று தெரியுமா? நத்தை மணிக்கு 17 அடி தொலைவும், ஆமை மணிக்கு இருநூற்று இருபத்தேழு அடி தொலைவும் செல்லக் கூடியது.

அமோனியா, ஆஅர்செனிக், கரியமிலவாயு, கார்பன் மானாக்சைடு, கிர்ஸ்டிக், கோலிடைன், நிக்கோடின், பர்பரால், பார்வோலிஸ், பிரிடின், பென்லோ, பைரின், ப்ரஸ்சிக, லெண்டிடைன், லூட்டிடைந் இவையெல்லாம் என்ன தெரியுமா? இவையனைத்தும் சிகரெட் புகையிலுள்ள நச்சுக்கள்.

ஜோயி என்றால் என்னவென்று தெரியுமா? கங்காருவின் வயிற்றுப் பையிலிருக்கும் குட்டியைத்தான் ஜோயி என்கின்றனர்.

பிறந்த குழந்தைகள் எப்படி அழுதாலும் அதன் கண்களிலிருந்து கண்ணீர் வராது. இது ஏன் தெரியுமா? குழந்தை பிறந்த பின்பு, அதன் கண்ணீர்ச் சுரப்பிகள் வளர்ந்து செயல்பட 15 நாட்களாகும்.

காற்றுகளின் வேகம் எவ்வளவு என்று தெரியுமா? தென்றல் காற்று மணிக்கு ஆறு மைல் வேகத்தில் வீசும். சாதாரண காற்று மணிக்கு 12 மைல் வேகத்திலும், கடுமையான காற்று மணிக்கு 20 மைல் வேகத்திலும், புயல் மணிக்கு காற்று 40 மைல் வேகத்திலும், சூறாவளி மணிக்கு 60 மைல் வேகத்திலும் வீசும்.

மாமிசம் உண்பவர்களை உண்மையில் எப்படி அழைக்க வேண்டும் தெரியுமா? சைவ உணவு உண்பவர்களை ஆங்கிலத்தில் வெஜிடேரியன் (Vegetarian) என்கிறோம். புலால் உணவு உண்பவர்களை நான் வெஜிடேரியன் என்கிறோம். இது சரியானதா? வெஜிடேரியன் என்ற சொல்லுக்குச் சரியான எதிர்ச்சொல் கார்னிவோரஸ் (Carnivorous) என்பதுதான். இதன் பொருள் மாமிசம் உண்ணுதல்.
-சித்ரா பலவேசம், திருநெல்வேலி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.