1. பக்தன் என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் பக்தன் - (பக்த) பிரகலாதன்
2. கோயில்களில் ஆண்டுதோறும் நடக்கும் உற்சவம் - பிரம்மோற்ஸவம்
3. திருநாவுக்கரசருக்கு பெற்றோர் இட்ட பெயர் - மருள்நீக்கியார்
4. தமிழ் ஆண்டுகள் அறுபதும் படிகளாக அமைந்த தலம் - சுவாமிமலை
5. திரிபுவனமாதவி சதுர்வேதிமங்கலம் என்ற புராணப்பெயர் கொண்ட தற்போதைய ஊர் - திருச்செந்தூர்
6. குறைந்தபட்சம் விளக்கு ஏற்ற வேண்டிய காலம் - 24 நிமிடங்கள் (ஒரு நாழிகை)
7. நாரதரின் கையிலிருக்கும் வாத்தியம் - மகதி யாழ்
8. ஐயப்ப பக்தர்கள் விரதம் இருக்க வேண்டிய நாட்கள் - 41 நாட்கள்
9. "கடை விரித்தேன் கொள்வார் இல்லை' என்று வருந்திப் பாடிய அருளாளர் - வள்ளலார்
10. நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம் - சங்கார தாண்டவம்
11. நாரதரால் மகரிஷியாக மாறிய வால்மீகியின் இயற்பெயர் - ரத்னாகரர்
12. விபூதி என்பதன் நேரடியான பொருள் - மேலான செல்வம்
13. ஸ்ரீவிருட்சம் என்று சிறப்பிக்கப்படும் மரம் - வில்வமரம்
14. அழகர்கோவிலின் புராணப்பெயர் - திருமாலிருஞ்சோலை
15. தன்வந்திரியின் கையில் இருக்கும் பூச்சி - அட்டை
16. "சரவணபவ' என்பதன் பொருள் - நாணல் காட்டில் பிறந்தவன்
17. பிருந்தா என்னும் சொல்லின் பொருள் - துளசி
18. பிருகஸ்பதி என்பதன் பொருள் - கல்வியில் சிறந்தவர்
19. சுக்கில பட்சம் என்பது - வளர்பிறை
20. மன்மதன் வரும் தேரின் பெயர் - பூந்தென்றல்
21. யுகங்களில் தர்மயுகம் என்று சிறப்பிக்கப்படுவது - கிருதயுகம்
22. முருகனிடம் தமிழ் மொழியைக் கற்றறிந்த முனிவர் - அகத்தியர்
23.சிவன் "அம்மா' என்று அழைத்தவர் - காரைக்காலம்மையார்
24. சூரியனின் ஒற்றைச் சக்கர தேருக்கு சாரதியாக இருப்பவர் - அருணன்
25. சுப்ரபாதம் என்பதன் பொருள் - நல்ல காலை வேளை
26. முகூர்த்தம் என்பதன் கால அளவு - 90 நிமிடம்
27. சுவாமி என்பதன் பொருள் - சொத்துக்கு உரிமையானவர்
28. தலை தாழ்த்தி இறைவனை வணங்குதல் - ஓரங்க நமஸ்காரம்
29. பிரம்மலிபி என்பதன் பொருள் - தலையெழுத்து
30. சப்தாஸ்வன் (ஏழு குதிரைகளைக் கொண்டவன்) என்ற சிறப்புப் பெயர் கொண்டவர் - சூரியன்