எந்த மூலையில் மேகம் திரண்டால் மழை வரும்?
தமிழகத்தில் வடகிழக்கு மூலையினை ‘மாரிமூலை’ என்பர். அதனைச் ‘சனிமூலை’ எனவும், ஈசானி எனவும், ‘கொடிக்கால் மூலை’ எனவும் புகழ்ந்து பேசுவர். மாரிமூலையில், வடகிழக்கு மூலையில் மேகம் திரண்டால், உடனே மழை. மாரிமூலை கருத்தால் மழைக்கு அடையாளம் ஈசானி மூலையில் மாரி கருத்தால் எருது நடுங்கும். (மழை அதிகமாகப் பெய்யுமே உழவு வேலை அதிகமாக இருக்குமே என்று காளை மாடுகள் நடுநடுங்குமாம்) அதற்கு நேர் எதிர்மாறானது ‘தென்மேற்கு மூலை’ இதனைத் ‘திருவண்ணாமலை மூலை’ என்று காஞ்சிபுரத்தில் உள்ளார் கூறுவர். இந்த மூலைக்கு ‘எருது சிரித்தான் மூலை’ என்று பெயர் உண்டு. இந்த மூலையில் மேகம் திரண்டாலும் மழை வராது. பயப்படாமல் பயணத்தைக் தொடரலாம்.
- முனைவர் ஸ்ரீவாலாம்பிகை
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.