* அஜந்தாவில் இருபத்தொன்பது குகைகள் உள்ளன.
* மோனலிசா ஓவியம் வரைய மொத்தம் 3 ஆண்டுகள் பிடித்தன.
* ஐரோப்பிய நாடுகளுக்கான ஒரே புதிய கரன்ஸி யூரோ.
* இங்கிலாந்து நாட்டில்தான் பெயிண்ட் கண்டு பிடிக்கப்பட்டது.
* உளுந்து மண்ணை வளப்படுத்தும் ஒரே தாவரமாகும்.
* உலோகங்களில் லேசானது லிதியம்.
* குளிர் காலத்தில் குயில் கூவுவது இல்லை.
* உயர்ந்த ஒலி கவரும் பொருள் இழைக்கண்ணாடி.
* சூரியக்கதிர்கள் கடலுக்குள் 350 அடி வரை செல்லும்.
* மழையை அளக்க ‘புளூவியோ மீட்டர்‘ என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது.
* ‘போப்‘ என்ற சொல் ‘பாபா‘ என்ற லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து உருவானதாகும்.
* கடல் நீரிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் நம் நாட்டில் முதன்முதலாகக் குஜராத்தில் தொடங்கப்பட்டது.
* மூங்கில் 50 அடிக்கு மேல் வளரும் புல் இன தாவரமாகும்.
* குதிரை நின்றுகொண்டே உறங்கும் விலங்கு.
* இலைகளை உதிர்ப்பது போன்று கிளைகளை உதிர்க்கும் தாவரம் - செரி.
* ரத்தம் உறைவதற்கு உதவும் வைட்டமின் - வைட்டமின் கே.
* பூமியே ஒரு பெரிய காந்தம் என்று கண்டறிந்தவர் - வில்லியம் கில்பர்ட்.
* புலிக்குகை என அழைக்கப்படும் கலையரங்கம் - மகாபலிபுரம்.
* கண்ணாடி ஓர் எளிதில் கடத்தி என்பதால், சூடாக்கும் போது உலோகங்களை விட கண்ணாடி எளிதில் விரிசல் அடைகிறது.
* வளிமண்டலமும் அதன் மழை தட்பவெப்பம் காற்றோட்டம் தொடர்பான பண்புகள் பற்றிய அறிவியலே வானிலை இயல் (Meteorology) எனப்படுகிறது.
* 1660 ஆண்டுக்கு முன்புவரை கடிகாரங்களில் மணியைக் காட்டும் முள் மட்டுமே உண்டு.
* உலகின் அனைத்துக் கண்டங்களின் தென்பகுதி குறுகலாகவும் , வடபகுதி அகலமாகவும் இருக்கிறது.
* தாயின் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு எட்டாவது வாரத்தில் கைவிரல்கள் தோன்றி, அதில் ரேகைகளும் பதிய ஆரம்பித்துவிடும், அதன் பின் இறக்கும் வரை எந்த ஒரு மனிதனுக்கும் மாறுவதில்லை.
* அமெரிக்க சட்டசபைக் கட்டிடத்தில் ஆண்டின் நாட்களை குறிப்பிடும் வகையில் 365 படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
* மகாத்மா காந்தியை ‘காந்தியடிகள்‘ என்று முதன் முதலில் அழைத்தவர் திரு.வி. கல்யாணசுந்தரனார்.