திருமண அழைப்பிதழ்களை கையில் கொடுக்காமல் தாம்பூலத்தட்டுகளில் வைத்துக் கொடுக்கும் வழக்கம் பயன்பாட்டிலிருக்கிறதே... இது ஏன் என்று தெரியுமா?
திருமண அழைப்பிதழ்கள் மட்டுமல்ல. ஒருவர் இன்னொருவரிடம் பொருளொன்றை கடனாகக் கொடுக்கையில் தட்டில் வைத்துத்தான் கொடுப்பார்கள்.
அரிசி, நெல் முதலானவற்றைக் கொடுக்கையில் முறத்தில் வைத்துத்தான் கொடுப்பார்கள்.
இந்த வழக்கம் உருவாகியதன் காரணம், கொடுப்பவரும் வாங்குபவரும் பொருளாதார அளவில் மேல்கீழாய் இருந்தாலும் அந்த வேற்றுமை மனதிலில்லை என்பதைக் காட்டுவற்காகவே...
வெறுமனே கையால் கொடுத்தால், கொடுப்பவர் கை மேலும் வாங்குபவர் கை கீழுமிருக்கும். இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் நம்மவர்களின் மனதுள் தோன்றக்கூடாதென்பதற்காகவே எப்பொருளைக் கொடுத்தாலும் தட்டில் வைத்துக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் நம் முன்னோர்கள்.
கால மாற்றத்தால் தற்போது இது மருவி விட்டாலும், நமது பழக்க வழக்கங்களை மதித்து நடக்க வேண்டும் என்பதற்காகவே இதை ஒரு நடைமுறையாக மாற்றினர் நமது முன்னோர். அதனால்தான் அழைப்பிதழை தட்டுகளில் வைத்துக் கொடுக்கும் வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது.