பூச்சி உண்ணும் தாவரம்
நெப்பென்டிஸ் (nepenthes) எனும் செடி பூச்சிகளை உண்ணும் தாவரமாக இருக்கிறது. இந்தச் செடிகளில் இருக்கும் ஒரு பை அல்லது குடுவை போன்ற அமைப்புதான் பூச்சிகளைக் கவர்ந்திழுக்கிறது. ஈ, கொசு போன்ற சிறு பூச்சிகள், இந்த பை போன்ற அமைப்புக்குள் சென்றால் அந்த தாவரம் அப்படியே விழுங்கி செரிமானம் செய்து விடும். குடுவையில் 'பெப்சின்' என்ற திரவமும், குடுவையின் வாயில் தேன் சுரப்பிகளும் இருக்கின்றன. இதன் கவர்ச்சிகரமான வண்ணம், புள்ளிகள், திட்டுக்களுடன் இருக்கும் குடுவை, சிறு பூச்சியினங்களைக் கவர்ந்திழுக்கிறது. தேன், நிறம், வாசனையால் கவரப்பட்டுச் செல்லும் பூச்சிகள், குடுவையில் சறுக்கிக் கீழே விழுகின்றன. உள்நோக்கி வளைந்திருக்கும் குடுவையின் முடிகளால், கீழே விழுந்த பூச்சியினங்கள் தப்பி மேலே வர முடிவதில்லை. இப்படி வசமாக சிக்கிக்கொண்ட பூச்சிகளை, குடுவையில் இருக்கும் பெப்சின் திரவம் (Pepsin fluid) செரிமானம் செய்து விடுகிறது. இதன் மூலம் தனக்கு பற்றாக்குறையாக இருக்கும் நைட்ரேட், பாஸ்பேட் சத்துக்களை இந்தத் தாவரம் பெற்றுக்கொள்கிறது.
தொகுப்பு - மு. சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.