* ரத்தம் உறைவதற்கு வைட்டமின் கே உதவுகிறது.
* பூமியே ஒரு பெரிய காந்தம் என்று கண்டறிந்தவர் வில்லியம் கில்பர்ட்.
* அஜந்தாவில் இருபத்தொன்பது குகைகள் இருக்கின்றன.
* ஐரோப்பிய நாடுகளுக்கான கரன்ஸி யூரோ
* பெயின்ட் இங்கிலாந்து நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
* மண்ணை வளப்படுத்தும் ஒரே தாவரம் உளுந்து.
* உலோகங்களில் இலேசானது லிதியம்
* குளிர் காலத்தில் குயில் கூவுவது இல்லை
* உயர்ந்த ஒலி கவரும் பொருள் இழைக்கண்ணாடி
* ஹாலஜன்கள் என்பவை அலோகங்கள்
* வளிமண்டலமும் அதன் மழை தட்பவெப்பம் காற்றோட்டம் தொடர்பான பண்புகள் பற்றிய அறிவியலை வானிலை இயல் (Meteorology) என்கின்றனர்.
* உலகின் மிகப்பெரிய பூங்கா கனடாவில் உள்ள `உட் பபெல்லோ நேஷனல் பார்க்'
* ஆப்பிரிக்கா கண்டத்தில் மட்டுமே வரிக்குதிரை காணப்படுகிறது.
* மேகங்களின் வீடு என்று அழைக்கப்படுவது மேகாலயா.
* ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள் எகிப்தியர்கள்.
* அட்லசை கண்டுபிடித்தவர் லப்ரேரி அட்லஸ்.
* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும். அது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.
* தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உள்ளன. ஒன்று சேமிப்பு அறையாகவும், மற்றொற்று ஜீரண உறுப்பாகவும் பயன்படுகிறது.
* மண்புழுக்களில் ஆண், பெண் என்ற தனித்தன்மை கிடையாது. மண்புழுக்களுக்குக் கண் இல்லை. இது தோலிலிருந்தே சுவாசிக்கிறது.
* ஆமைக்குப் பற்கள் கிடையாது.
* வாத்தை தேசிய பறவையாகக் கொண்ட இரு நாடுகள் கனடா, ஜாவா.
* பாலில் இல்லாத சத்து இரும்புச்சத்து.
* உலகில் அதிக அருங்காட்சியங்கள் உள்ள நாடு ஜெர்மனி.
* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது எறும்பு.
* உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம், பனாமா கால்வாய்.
* தபால்தலையை (ஸ்டாம்ப்) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு மலேசியா.
* உடலில் ரத்தம் பாயாத பகுதி கருவிழி.