தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்களைச் சேர்த்து பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த வாய்பாட்டுப் பாடல் ஒன்று இருக்கிறது. அது;
"நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே
கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு"
(இந்தப் பாடலில் கைந்நிலை என்பது ஒழுக்கத்தைக் குறிக்கும்)
இந்தப் பாடல் குறிப்பிடும் நூல்கள் இவைதான்;
1. நாலடியார்
2. நான்மணிக்கடிகை
3. இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று)
4. இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று)
5. கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று)
6. களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று)
7. ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
8. ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
9. திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
10. திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
11. முப்பால் (திருக்குறள்)
12. திரிகடுகம்
13. ஆசாரக் கோவை
14. பழமொழி நானூறு
15. சிறுபஞ்சமூலம்
16. கைந்நிலை
17. முதுமொழிக் காஞ்சி
18. ஏலாதி