இதமிழ்நாட்டில், காசி என்னும் சொல் குறித்து, அகராதிகளிலும், மக்கள் பயன்பாடுகளிலும் பல்வேறு சொற்கள் புழங்குகின்றன. அவற்றுள் சில;
காசிக் கம்பு - ஆனியில் விதைத்துப் புரட்டாசியில் கொய்யப்படும் கம்புப்பயிர்
காசிக்கமலம் - பட்டை தீர்ந்த வைரக்கல் வகை
காசிக்கல் - காந்தசத்தி உள்ள ஒருவகை இரும்புக்கட்டி
காசிக்குப்பி - கங்காசலம் (கங்கை நீர்) அடைத்த குப்பி
காசிச்சம்பா - நெல் வகை
காசிச்சாரம் - ஒருவகை உப்பு
காசிச்சீரம் - 1. சிறு சீரகம்; 2. பெருஞ்சீரகம்
காசிச்செம்பு - ஒரு பாதி செம்பும் மறு பாதி பித்தளையுமாகச் செய்யப்பட்டுக் கங்கை நீர் கொணர்தற்குரிய பாத்திரம்
காசித்தீர்த்தம் - காசியில் எடுக்கப்படும் கங்கை நீர்
காசித்தும்பை - 1. செடிவகை; 2. தும்பை வகை
காசிப்பட்டு - ஒருவகைப் பட்டாடை
காசியரளி - தங்க அரளி
காசியலரி - அலரி வகை
காசிலவணம் - உப்பு வகை
காசிப்பார்ப்பான் - மீன் வகை (நாஞ்சில் நாட்டு வழக்கு)
காசிக்கிருட்டி - புள்வகை (யாழ்ப்பாண அகராதி)
மேற்கண்ட சொற்கள் காசி நகருக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான பண்பாட்டுத் தொடர்பினைக் குறிப்பிடுகின்றன.