ஊது கொம்பு (Trumpet) என்பது மேல் ஸ்தாயி ஒலியைக் கொடுக்கும் ஒரு காற்று வகை இசைக்கருவியாகும். இந்த இசைக் கருவி மிகப் பழமையானது. கி.மு 1500 ஆம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இக்கருவி பயன்பாட்டில் இருந்து வருவதாக அறியப்பட்டுள்ளது.
ஊது கொம்பின் ஆங்கிலச் சொல்லான "Trumpet" என்பது 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முதலில் பயன்படுத்தப்பட்டது. இது பழைய பிரெஞ்ச் வார்த்தையான "Trompette" இலிருந்து வந்ததாகும். இச்சொல்லுக்கு மிகக்குறுகலான தும்பிக்கை என்பதாகும். "Trumpet" என்று பொருள்படும் "Trump" என்ற வார்த்தை கி.மு 1300 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. இந்த வார்த்தை, பழைய பிரெஞ்சு டிராம்பேயிலிருந்து (Trompe) வந்ததாகக் கருதப்படுகிறது. அதன் பொருள் “நீண்ட, குழாய் போன்ற காற்று இசைக்கருவிகள்" ஆகும். ப்ரோவென்சல் டிரோம்பா, இத்தாலிய டிரோம்பா அநேகமாக அனைத்துமே ஜெர்மானிய ஆதார மூலத்திலிருந்து வந்தவை ஆகும்.
ஆரம்பகால ஊது கொம்புகள் கி.மு. 1500 மற்றும் அதற்கு முற்பட்டவையாகும். எகிப்தில் துட்டன்காமன் கல்லறையில் இருந்து வெண்கல மற்றும் வெள்ளி ஊது கொம்புகளும், ஸ்காண்டிநேவியாவில் இருந்து வெண்கல நீள் ஊது கொம்புகளும், சீனாவில் இருந்து உலோக ஊது கொம்புகளும் இந்தக் காலத்திற்கு முன்பே உள்ளன. மத்திய ஆசியாவின் ஆக்ஸஸ் நாகரிகத்தில் (கி.மு.3வது புத்தாயிரம்) இருந்து ஊது கொம்புகளின் மத்தியில் அலங்காரப் புடைப்புகள் கொண்டவையாகவும் ஒரு உலோகத்தாளில் இருந்தும் தயாரிக்கப்படுவது ஒரு தொழில்நுட்ப அதிசயமாகக் கருதப்படுகிறது.
ஷோபார் என்ற செம்மறி ஆட்டின் கொம்பால் செய்யப்பட்ட ஊதுகுழல் மற்றும் உலோகத்தால் செய்யப்பட்ட Hatzotzeroth என்ற இசைக்கருவி பற்றியும் விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 3000 ஆண்டுகளுக்கு முன்னர் இக்கருவிகள் சாலமன் தேவாலயத்தில் இசைக்கப்பட்டுள்ளது. ஜெரிகோ சுவர்களில் அவை இசைக்கப்ட்ட செய்திகளும் கிடைக்கப் பெறுகின்றன. குறிப்பட்ட மதச் சம்பிராய நாட்களில் இவை இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. எலும்பு மற்றும் வெண்கலத்தால் செய்யப்பட்ட சால்பிங்சு என்ற 62 அங்குல (1,600 மிமி) நீளமுடைய நேரான இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சால்பிங்சு போட்டிகள் அசல் ஒலிம்பிக் போட்டியின் அங்கமாக நடத்தப்பட்டிருக்கின்றன.
கி.மு 300 ஆண்டுகளுக்கு முன்னர் பண்டைய பெருவின் மோச்சே மக்கள் ஊதுகுழலைப் பயன்படுத்தியதற்கான சான்றுகள் கிடைக்கப்பட்டுள்ளன. தற்காலத்தில் இசைப் பயன்பாடாக கருதப்படுவது போலல்லாமல் ஆரம்ப கால ஊதுகுழல்கள் இராணுவம் மற்றும் மத நோக்கங்களுக்கான சமிஞ்ஞைக் கருவிகளாக பாவிக்கப்பட்டன. தற்காலத்தில் நவீன வகை ஊதுகுழல்கள் சமிஞ்ஞை பயன்பபாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
ஊதுகொம்பில் பல வகைகள் உண்டு. முற்கால ஊது கொம்புகளில் வால்வுகள் இருக்கவில்லை. தற்கால ஊது கொம்புகள், ஆடுதண்டு வால்வுகள் அல்லது சுழல் வால்வுகளைக் கொண்டுள்ளன. இவற்றை இயக்குவதனால் குழாயின் நீளத்தைக் கூட்ட முடியும். இது உண்டாகும் ஒலியின் சுருதியைக் குறைக்கிறது.
மத்தியக் காலக் கடைசிப்பகுதி மற்றும் மறுமலர்ச்சிக் காலங்களில் கருவிகள் வடிவமைப்பு மற்றும் உலோக உற்பத்தி மேம்பாடு ஒரு ஊதுகுழல் இசைக்கருவிகளாக பயன்பாடுகளை அதிகரிக்க வழி வகை செய்தன. இக்காலத்திய இயற்கை ஊதுகுழல்கள் ஒற்றைக் கம்பி சுத்தப்பட்டதாகவும், வால்வுகள் அற்றதாகவும் ஒற்றைச் சுருதி வரிசைகளை உருவாக்கும் திறனுடையதாகவும் இருந்தன. இக்கருவிகளின் வாங்குகோலை (Crook) இயக்குவதற்கான மாற்று விசைக்கான நபர்கள் தேவைப்பட்டனர். உயர் 'கிளாரினோ' வளர்ச்சி சிறப்பு ஊதுகுழலாளர்களால் குறிப்பாக செசரே பெண்டினெல்லி பரோக் சகாப்தத்தில் நன்கு அறியப்பட்டவராவார். இக்காலகட்டம் இயற்கை ஊதுகுழலின் பொற்காலம்" எனவும் அழைக்கப்படுகிறது.
இக்காலத்தில் ஒரு பரந்த இசை தொழில்முறை ஊதுகுழலாளர்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டது. ஊதுகுழல் வாசிப்புக் கலை 20 ஆம் நூற்றாண்டின் மத்தியில் புதுப்பிக்கப்பட்டது மற்றும் இயற்கை எக்காள விளையாட்டு மீண்டும் உலகெங்கிலும் வளர்ந்து வரும் கலை. செருமனி மற்றும் இங்கிலாந்தில் பல நவீன இசைக் கலைஞர்கள் பரோக் இசை நிகழ்ச்சிகளி்ல் இயற்கை ஊது குழைலைப் பயன்படுத்துகின்றனர். இவை மூன்று அல்லது நான்கு வெளியேறும் துளைகளைக் கொண்டிருக்கும் இவை மெல்லிசைத் தொடரின் வெளிக் குறிப்புகளை சரி செய்ய உதவும்.
ஊதுகொம்பு செந்நெறி இசை, ஜாஸ் போன்ற பல இசை வகைகளில் பயன்படுகின்றது. லூயிஸ் ஆம்ஸ்ட்ராங், மைல்ஸ் டேவிஸ், டிஸ்சி கில்லெஸ்பி, பிக்ஸ் பீடெர்பெக், கிளிபோர்ட் பிரவுண், லீ மோர்கன், பிரடீ ஹப்பார்ட், செட் பேக்கர், மேனார்ட் பெர்கூசன் போன்றோர் புகழ் பெற்ற ஊதுகொம்பு இசைக் கலைஞர்களுள் அடங்குவர்.