இனி (ய) தமிழ் மொழியே...! - 29
வள்ளுவனின் வாய்மொழியே
என் பாட்டன்
பாரதியின் தாய் மொழியே
அறத்தமிழே. . .
மறத்தமிழே . . .
இணங்குகிறேன் உன் மீது பரிவு காட்டி
வணங்குகிறேன் இருகைகளில் மலர் நீட்டி . . !
தேசத்தில் நாலாபுறமும்
விடுதலைத் தீ எரிந்த போது
தமிழ் மொழியே
பாரதி உம்மை பயன்படுத்தியது
காகித மொழியாய் அல்ல
ஆயுத மொழியாய் . . !
உலகின் பல நாடுகளில்
நீயே
அதிகார மொழி
நீயே
ஆட்சி மொழி . . !
உயர்தனிச் செம்மொழியே
நீ பிறந்த இம்மண்ணில்
இந்திய கரன்சி தாளில்
பதிமூன்றாம்
இடத்திலே இருக்கின்றாய்
நம்பிக்கை தெரிகின்றது
முதலிடம் பிடிப்பாய் என்று . . !
இனிய தமிழ் மொழியே
உன் பெருமை பாட
கலாச்சாரம் காத்திட
எண்ணற்ற
இலக்கியங்கள் தான் இம்மண்ணில்
குறள் முதல்
தமிழாற்றுப்படை வரை . . !
உயரத்தில் இருக்கும்
நிலவு மொழியே . . .
தொன்மை மொழியே . . .
முதன்மை மொழியே . . .
நோபல் பரிசு உமக்குக் கிடைக்கவில்லையென
நாங்கள் வருத்தப்படவில்லை
உம்மை
சென்றடையவில்லையேயென
நோபல்காரர்கள் தான்
வருத்தம் கொள்ள வேண்டும் . . !
இனிய தமிழ் மொழியே . . .
இந்திய மண்ணில்
நீதிமன்றம் . . பாராளுமன்றம் தாண்டி
ஐ. நா சபையிலும்
தொடர்ந்து ஒலிக்க வேண்டும்
திசையெங்கும்
இனி தமிழ் மொழியே . . !
- வீ. அக்கினி வீரா, சருத்துப்பட்டி, தேனி மாவட்டம்.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.