அன்றும் இன்றும் - 13
அன்று மழலையில்
கிடைத்த மகிழ்வும் மனிதநேயமும்
வளர்ந்த பின்பு
சூழ்நிலை சுயநலமாக
இன்று கேள்விக்குறியே...
கூட்டுக் குடும்ப
வீட்டு வாழ்க்கையின்
சந்தோஷ மன நிறைவு அன்று...
பற்றாக்குறையும்
கடனட்டையும் வட்டியும்
பள்ளிக் கட்டணத்தில் நிறைவின்றி இன்று...
வளர்ச்சி குறைந்த
ஆனால்
வளங்கள் நிறைந்த
ஆரோக்கியமான வாழ்வு அன்று...
வளர்ச்சியும் பொருளாதாரச் சூழல் பெருகியும்
நோயும் மருந்தும்
நித்திரையில்லா வாழ்வாய் இன்று...
அன்று மருந்தில்லா
இயற்கை உணவு
கலப்படமில்லா காற்றும்
சுகமான வாழ்வும்...
இன்று ஏசி காற்றும்
நவீன பீசா பர்க்கரும்
பாலின்தின் பையில்
அடைபட்ட திண்பண்டமும்
ஆரோக்கியமற்ற வாழ்வே...
அன்று இருந்த
நிறைவான வாழ்வு
இன்று கேள்விக்குறியே...
அன்று
இருந்த வனங்களைக் காக்க மறந்து,
மாடி வீட்டுகளில் மனம் மயங்கி
இயற்கையைத் துறந்தோம் இன்று...
வரும் தலைமுறை
அன்றை விடவும்
இன்றை விடவும்
சிறப்பாக வாழ
நவீனம் காட்டிலும்
இயற்கையைக் காத்துத் தருவோம்...
- சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.