அன்றும் இன்றும் - 28
பிள்ளைகளின் தெய்வரூபமாய் தாய்மை அன்று
பிரியாணிக்காகப் பிள்ளையைக் கொல்லும் பேய்மை இன்று
ஐந்து வயது வரை பிள்ளைகளுக்குத் தாய்ப்பால் அன்று
ஐந்து மாதக் கட்டாயத் தாய்ப்பால் பூத்துகள் இன்று
ஆரோக்கியமான ஆட்டுப்பால் அன்று
ஆவினையே நம்பியிருக்கும் நிலை இன்று
சக்கரமிட்டாய், அச்சுவெல்லம், அமிர்தம் அன்று
டயரிமில்க், பைவ்ஸ்டார், சாக்லேட் இன்று
நண்பர்களுடன் சேர்ந்து விளையாட்டுத் திடலில் அன்று
அருகிலே இருந்தாலும் ஆளுக்கொரு அறைக்குள் இன்று
ஔவை அதியமான் போன்ற நட்பு அன்று
ஆண், பெண் நட்பு கலவியில் முடிவது இன்று
ஆசிரியர் அமர்ந்து மாணவர் பணிந்து கற்றனர் அன்று
ஆசிரியர் பணிந்து மாணவர் அமர்ந்து கற்கின்றனர் இன்று
தெருவோர விளக்கில் முளைத்த விஞ்ஞானி அன்று
வீடெல்லாம் மின் விளக்கிருந்தும் விஞ்ஞானியில்லை இன்று
இல்லறம் நல்லறமானது அன்று
இல்லறம் நீதிமன்றம் நாடுது இன்று
வீடுகளில் கதை சொன்ன பெரியவர்கள் அன்று
வீட்டைவிட்டு முதியோர் இல்லம் சென்றனர் இன்று
கற்புக்காக கண்ணகி மதுரையையே எரித்தாள் அன்று
கற்பை சமூக வலைத்தளங்களில் விற்கின்றாள் இன்று
- மு. ராமலட்சுமி, தர்மாபுரி, தேனி மாவட்டம்.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.