அன்றும் இன்றும் - 4
உழைப்பில்...
மண்ணை மட்டுமே கிளறிக் கொண்டு
மண்புழுவில் ஜீவித்து
நாட்களை நகர்த்தினோம் அன்று...
விண்ணையேக் களமாக்கி
விஞ்ஞானத்தை வசமாக்கி
அடுத்த தலைமுறைக்கும்
அறிவியலைப் புகுத்துகின்றோம் இன்று...
மூடத்தனத்தில்...
அடைக்கப்பட்ட
வீட்டுக் கோழிகளாய்
அடக்கப்பட்டனர் பெண்கள் அன்று...
இலக்கைச் சென்றடையும் ஏவுகணையென
பல்துறைகளிலும்
சாதனைச் சுடர்களாய் பெண்கள் இன்று...
குடும்பத்தில்...
தாம்பத்ய வாழ்வே
தரமான வாழ்வென்று நினைத்து
குழந்தைப் பேற்றை அதிகரித்து
தேசத்தை வறுமைக்குள்
கொண்டு போய்விட்டோம் அன்று...
கட்டுப்பாடு கொண்டு
கவனமாய் ஒன்றிரண்டு பெற்று
தேசத்தை வளமாக்கினோம் இன்று...
சமூகத்தில்...
உறவுகளையேச் சார்ந்திருந்ததால்
வட்டமிட்டுத் திரியும்
கழுகாய் வாழ்ந்தோம் அன்று...
சுயசார்பில் நம்மை நாமே
வைரமென்று நினைத்துக் கொண்டு
வைராக்கியமாய் வாழ்வதால்
வாழ்வில் உயர்ந்து நிற்கிறோம் இன்று...
- அக்கினி வீரா, சருத்துப்பட்டி, தேனி மாவட்டம்.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.