வசந்த விடியல் - 12
வண்ண கனவுகளில் வாழாமல்...
எண்ணச் சிறகுகளை விரித்து...
எழுத்துருவில் உயிர் தந்து
வசந்த விடியலில் மலர விடுவோம்...
பெண்மையை இன்னும்
போற்றும் ஒரு புதிய விடியலை
நோக்கிப் பயணிபோம்...
நம்பிக்கை நட்சத்திரமாய்
உதிக்கும் போதெல்லாம்
விடிந்தாக வேண்டும்
எந்த இருளும்...!
வசந்த விடியலாக...
ஆதவனின் கதிர்ப் போல
விடிந்த பொழுதில் நீ,
முத்து முத்தாய் வேர்வை
சிந்தி உழைத்திடு,
உன்னைக் காண்போரும் வியந்திட,
தகுதி வளர்க்க ஆவணம் செய்!
திறமையை மெருகேற்றிடத் தயாராயிரு!
வினைப்பயனாய் நீயும்,
அவன் போல் தரணி ஆளலாம்
சுடர் விட்டுச் சுற்றி வரலாம்!
விடியலுக்காய் காத்திருக்காமல்
விடிந்த பொழுதுக்காய் ஆயத்தமாயும் இரு!
ஏனெனில், விடியல் என்பது முடிவல்ல...
ஒரு வாய்ப்பு...!
வசந்த விடியல் தகதகவென
மின்னும் ஒரு நாளில்
வெற்றியின் வாசலில்...
- சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.