வசந்த விடியல் - 25
வசந்தமே விடியலே வருவாயோ
வருவதாயிருந்தால் வலு குன்றுமுன்
வாரிசுக்காவது வசந்தமே விடியலே வருவாயோ
பொன்பொருளில்லை, அதற்கான வரவில்லையே
வசந்தமே எம்மை எப்போது காண்பாயோ?
பொறையுற்ற நலம் நம்மைப் போரிட அழைக்கிறது
பொல்லாத் திட்டமும், பொதுவில்லாச் சட்டமும்
போராயினும் புறப்படு, அறிவாயுதம் ஏந்தியே
மீள்வரோ அரக்கத்தின் அறிவிலிகள்
புதைந்த பொக்கிஷம் எம்பிறப்பைப் போன்றதே
போகும் திசையிலா பூமியே, நீயாவது புரிவாயா?
உலகில் மூத்தவள் உயிர்க்க உரிமையில்லையோ?
ஊடகமே, உண்மை உரைக்க மாட்டாயோ?
அழித்திடு! பகைவரை அடியோடு!!
அழித்திடு அநீது இழைப்பவரை!
அடைந்திடுவோம் அப்பழுக்கற்ற நிலத்தை
அகப்படுமே அமைதியும் வசந்தமுமே...!
- ரா. பாலன், தேனி.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.