கொரானாவை வெல்வோம்! - 10
நம்முயிரை நாமேதான் காக்க வேண்டும்
நம்பிக்கையுடனே தான் வாழ வேண்டும்
தும்மலையும் இருமலையும் மூட வேண்டும்
தூரமாக இடைவெளியை விடவும் வேண்டும்
நம்கையை நாசினியால் சுத்தம் செய்வோம்
நடைமுறையில் சட்டத்தைக் காத்துக் கொள்வோம்
செம்மையாக வாழ்வதற்கே உறுதி ஏற்போம்
சீச்கிரமே மருந்தும்தான் வந்து சேரும்
அஞ்சாதே அஞ்சாதே அறிவால் வெல்வோம்
ஆட்டி வைக்கும் கொரானாவும் அழிந்து போகும்
துஞ்சாமல் உண்ணாமல் பணியைச் செய்யும்
செவிலியரை, மருத்துவரை, சுத்தம் செய்வோர்
நெஞ்சாரக் காவலரைப் போற்றி வாழ்த்தி
நன்றியினைக் கூட்டிடுவோம் அன்பு காட்டி
பஞ்சாகி எரிந்து போகும் நோயாம் தொற்று
பக்குவமாய் கொரோனாவை வென்று வெல்வோம்
- பாவலர் பாப்பாக்குடி அ. முருகன், பாப்பாக்குடி, திருநெல்வேலி மாவட்டம்.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.