கொரானாவை வெல்வோம்! - 11
ஊகானில் பிறந்து,
உலகத்தை மிரட்டும்
நுண்ணு யிர் அசுபமே
நுன் விளையாட்டு போதும்.
விழிக்கும் எங்கள் மனமே!
ஆறாத சோகத்தை
ஆழ்ந்து அமிழ்த்திக் கொண்டு,
கூக்குரல் போடாதே!
கூடிய விரை வில்,
அழிக்கும் ஆயுதம் காண்போம்,
அகிலத்தைக் காக்கும் நிலையறிவோம்.
விஞ்ஞானங் கண்டஞ் ஞானம் நீ,
மெஞ்ஞானங் கொண்ட நற்புவியிது,
தனித்து சுத்தமாய் விழித்திருந்தால்,
தணலாய் எரித்து அழித்திடலாம்
தொடர்வோம் நற்சேவையினை...
தொலைப்போம்...
கொரானா நோய்த்தொற்றினை...
- ப. வீரக்குமார், திருச்சுழி. விருதுநகர் மாவட்டம்.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.