கொரானாவை வெல்வோம்! - 8
ஒற்றுப் பிழையாய் ஒட்டிக் கொண்டு
ஒடுக்கி அவதி உடலில் தந்து
தெற்றாய் வந்து தெறிக்க விட்டாய்
தெரியாமல் நீ தொற்றிக் கொண்டாய்
கற்றுக் கொடுத்தாய் கலையாய் வாழ்வை
கலையாச் சிறப்பு கலையும் வாழ்வில்
பற்றுக் கோடாய் பணத்தைக் கொண்டு
பண்பு விட்டார், பாடம் தந்தாய்
மற்ற நலங்கள் மதிக்கா நிலையில்
மரபு வழியில் மாண்பு தந்தாய்
சற்றும் நினையாச் சடுதியில் வந்து
சங்கடம் நிகழ்த்திச் சாவு(உ)பயம் தந்தாய்
வெற்று ஆரவாரம் வெல்லா தென்பதை
வீணர்க் குணர்த்தி வீட்டி லடைத்தாய்
நெற்றி விதிப்படி நெடுந்தூரம் செல்வோம்
நெறியாக வாழ்ந்தே கொரோனாவைக் கொல்வோம்
- முருகேஸ்வரி ராஜவேல், திண்டுக்கல்.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.