கொரானாவை வெல்வோம்! - 9
கொரோனா எனும் கொடிய நோயே
சீனாவின் ஊகான் மாகாணத்தில் பிறந்து
உலக நாடுகளுக்குச் சென்று வளர்ந்து
உலக மக்களைக் கொத்துக்கொத்தாக
மரணிக்கச் செய்கிறாயே...!
உனக்கும் உலகில் வாழும் மக்களுக்கும்
முன் ஜென்மத்துப் பகையா?
இல்லை பிணக்கா?
கொரானோவே, நீ
மக்களைக் கொன்று குவித்து
உலகையே வென்று விட்டோம் என்று
பறை சாற்றிக் கொண்டிருக்கிறாய்...
வல்லரசு நாடாகிய அமெரிக்காவே
வலிமையிழந்து தவிக்கும் போது
வளரும் நாடாகிய இந்தியா
என்ன செய்ய முடியும்?
என்று எண்ணி விடாதே...!
அச்சமென்பது மடைமையடா...
அஞ்சாமை திராவிடர் உடைமையடா...
என்ற கொள்கையுடைய நாங்கள்
எதற்கும் அஞ்சோம்...
எங்களில் ஒருவர் உன்னை அழிக்க
விரைவில் மருந்து கண்டறிவோம்!
கொரோனாவை வெல்வோம்...
கொடும் நோயிலிருந்து மீள்வோம்..
- முனைவர் மோஜ. மகேஸ்வரி, சேலம்.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.