மார்கழிக் கோலங்கள் - 13
வானத்து நட்சத்திரங்கள் மண்ணில் வந்ததோ!
வானவில்லை வளைத்து வண்ணமிட்ட
கோலங்கள் எத்தனை எத்தனை!!
வீடு தோறும் அழகழகாய்
மலர்கோலமும் மாக்கோலமும் கண்டு
வண்டினமே தேன் குடிக்க வந்து
ஏமாந்து போகுமோ!
நீளம் தாண்டிப் பழகணும்...
கோலம் அளவை அளக்க...
கணிதம் தானேக் கற்றிடுவர்
பெண்டீர் புள்ளிகளை கூட்டிப்பெருக்கியே...
கால் கொலுசு சிணுங்க
கைவளையல் சேர்ந்தே நர்த்தனமிட
கன்னத்திலும் வண்ணத்தை
பூசிய படியே எண்ணத்தை எல்லாம்
அள்ளிக் கொட்டியே
வண்ணக் கோலமிடும் பெண்டிர்
நினைவு கூர்மையை
மெச்சாமல் இருக்க முடியுமா...
குனிந்து நிமிர்ந்து
உடற்பயிற்சியாகவும்
கோலத்தில் ஆரோக்கியம் மிளிருமே...
தெருவடைத்த கோலம்
அழிக்க மனமில்லாமல்
அடுத்த நாள் காலைவரை
வாசலை அலங்கரிக்குமே...
கோலத்தில் வகை பலப்பல ...
சிற்றிடை வேண்டிய பெண்டிர்
கோலத்தினால் உடற்பயிற்சி செய்தே
அழகாய் மிளிர்ந்தனர்...
- சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.