முதுமையைப் போற்றுவோம்...! - 12
முழுநிலவைப் போன்ற தூய்மையானது
முதுமை
கலங்கரை விளக்கு போன்றது...
முதுமை.
தேடல்களற்ற புதையலைச் சுமந்தது...
முதுமை.
விடி வெள்ளியாகப் பிரகாசிப்பது...
முதுமை.
வாழ்வின் அனுபவப் பெட்டகத்தை
வாரி வழங்குவது...
முதுமை.
தேகம் சுறுங்கினாலும்
பாசத்தில் வளர்பிறையானது...
முதுமை.
குன்றாத வளமைதனைக் கொண்டது
முதுமை
இளமையில் நாம் சொல்வதை இதயம் கேட்கும்
முதுமையில் இதயம் சொல்வதை நாம் கேட்க வேண்டும்.
முதுமை பற்றிப் பேசி பலகீனப்படுத்த வேண்டாமே.
முடிந்தால் முதுமையை வாழ்த்துங்கள்...!
- சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.