முதுமையைப் போற்றுவோம்...! - 9
தொண்ணூறுகளின்
பிரதிநிதி நான்
என் எண்ண ஓட்டத்தில்
வந்து போகிறாள் வீரம்மாள் பசுமையாக
நரைமுடி, புட்டிகண்ணாடி, சுருக்குப்பை,
வெற்றிலை மென்ற சிவந்த வாய், மெலிந்த தேகம்
இன்னும் அழகு சேர்ப்பாள் என் வீரம்மாள்.
ஐயங்கள் அத்தனையும் கலைந்தாள் ஆசானாக
என் சமிக்கை விளையாட்டில் பங்கேற்றாள்; சமமாக.
கதைகள் கதைப்பாள் கலையாக
அனுபவங்களின் அஞ்சறைப் பெட்டியவள்
நான் பெரிதாய் மதிக்கும் ஒரு ரூபாய் தந்தாள்
ஓராயிரம் முத்தங்கள் இடுவாள்
காயங்கள் வந்தால் பதறிஅழுவாள்
தூக்கம் கலைந்தால் வருடி விடுவாள்
என் முதுமையும் இது போல் அழகாய்
புடம் போட வேண்டும்
என் தலைமுறைக்கு.
- காளிதாஸ் கிருஷ்ணன், மதுரை..

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.