ஓவியம்...!
உனக்கு ரோஜா பிடிக்கும்
அதனால்
எனக்கும் பிடிக்கும்..!
எனக்கும் உனக்கும் பிடிக்கும்
ரோஜாப் பூவைச்
செடியில்,
கிள்ளிப் பறித்து
உனக்குத்தர விருப்பமில்லை..!
அதனால்
காகிதத்தில் ரோஜாவை
தூரிகை கொண்டு
வண்ணம் தீட்டிப்
பிரசவித்தேன்..!
அந்த அழகிய குழந்தையைக்
கண்ணாடிப் பேழைக்குள்
கவனமாய் வைத்துக்
கருத்தாய்ப் பேணினேன்..!
இந்தக் குழந்தை
இனி
உன் குழந்தை...
அதை
படுக்கும் அறையில்
பத்திரமாய் வைத்து
பாதுகாக்க வேண்டுகிறேன்...
‘தொட்டில் குழந்தை’- என
தூக்கி எறிந்து விடாதே..!!
- பாளை.சுசி .

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.