இதிலென்ன பொறாமை?
இறைவன் போடும் முடிச்சுகள்
இணைந்திடும் இதயங்கள்
இன்பமாய் நடந்தேறும் திருமணங்கள்
இங்குமேன் தலைதூக்க வேண்டும் பொறாமைகள்?
இறைவனுக்குக் காலம் காலமாய்
இறைக்கிறாய் காணிக்கை - நானோ
இன்றொரு நாள் வைத்தேன் விளக்கை
இன்றே கிடைத்ததெனக்கு புது வாழ்க்கை!
இளையாள் எனக்கு கிடைத்தது -
இல்வாழ்க்கை! மூத்தவள் உனக்கேன்
இன்னும் இல்லை - மனம் போல்
இன்ப மணவாழ்க்கை?
இப்படித்தான் சில
இரக்கமற்ற இதயங்கள்
இயல்பாய் நம் நெஞ்சில்
இறக்கிச் செல்லும் இடிகள்!
இதிலென்ன இலாபம்
இந்நெஞ்சங்களுக்கு?
இவர்களும் பெண்தானென்று
இதயத்தில் தோன்றுவதெப்போது?
இவ்வுலகில் பெண்ணே பெண்ணுக்கு எதிரி -
இந்த இழி பழி தான்
இனி மாறும் காலமும்தான் எப்போது?
இன்ப நல்லுறவும் தான் பிறப்பதெப்போது?
- பி.தமிழ் முகில் நீலமேகம், அமெரிக்கா.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.