முகநூல் தேவைதானா?
எத்தனை முறை
திரும்பத் திரும்பத்
திறந்து பார்த்தாலும்
புதிதாய் அங்கிருக்கப் போவது
ஒன்றுமில்லை!!! - இது
நாமனைவரும் அறிந்த
நிதர்சனமான உண்மை !
ஆனாலும் அதென்னவோ
அனைவரையும் காந்தமாய்
ஈர்க்கத்தான் செய்கிறது!!!
மது புகை போல
இதுவுமோர் போதை தான் !
முகமறிந்த உறவுகளை
மறக்கடித்து - முகமறியா
நட்புகளைத் தேடியலையச் செய்து
முகமூடிகட்குப் பின்னும்
போலிப் பெயர்கட்குப் பின்னும்
ஓடியலையச் செய்து
உள்ளத்தையே அடிமையாக்கி
உற்றோரை மறக்கடிக்கும்
முகநூல் தேவைதானா???
- பி.தமிழ் முகில் நீலமேகம்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.