நல்ல உள்ளங்களின் உடமைகள்!
உறவுகள் உணர்வுகள்
இவையெல்லாம் வெறும்
வார்த்தைகள் என்ற
நிலையாகி – காலங்கள்
பல கடந்துவிட்டன !!!
இதயப் பூர்வமான
அன்பு என்பதெல்லாம்
அவசர உலகிலெதற்கென்று
இறக்கை கட்டிக்கொண்டு
பறக்கின்றன – பல உறவுகள்!!!
காலடியில் மிதிபட்டாலும்
காலமெலாம் உந்தன்
நலமான வாழ்விற்காய்
துடித்துக் கொண்டே
இருப்பேனென – சில நல்லுள்ளங்கள்!!!
காயங்களும் கண்ணீரும்
சோகங்களும் சோர்வும்
காலங்காலமாய்
நல்லிதயங்கட்கு மட்டும்
உடமை என்றானதும் ஏனோ ???
- பி.தமிழ் முகில் நீலமேகம்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.