தேவை ஒரு மாற்றம்!
அறிவு புகட்ட வேண்டிய
அறிவாலயங்கள் எல்லாம்
ஆதாயம் சேர்க்கத்தான்
என்று ஆகி விட்டது
இன்று கல்வியும் - பணம்
ஈட்டுமோர் வியாபாரமாய் ...!
ஒன்று கூடி இருந்து
ஓடியாடி விளையாடி
மகிழ வேண்டிய பிஞ்சுகள்
ஓரிடமே கதியென்று
கட்டிப் போட்டாகி விட்டது
கணிப்பொறி விளையாட்டுகளில்...!
முதுகிலேற்றும் புத்தகச் சுமையுடன்
மூளையிலேற்ற வேண்டிய
பாடச் சுமைகளும் அதிகமாகச்
சேர்ந்து விட்டது - அவர்தம்
உடலும் உள்ளமும்
சோர்ந்துதான் விட்டது
கல்வி முறையில் தேவை –
உடனடி மாற்றம்!இல்லையேல்
நாளைய பாரதத்திற்கு காத்திருக்கிறது –
மிகப் பெரிய ஏமாற்றம்!!!
- பி.தமிழ் முகில் நீலமேகம்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.