தண்ணீரில் விழுந்த...?
அரை குறை ஆடையில்
அரை வயிற்றுக் கஞ்சிக்காய்
அலைந்து திரிந்து
அசதியுற்ற பிச்சைக்காரன்
ஆற்றங்கரை மணல்மேட்டில்
கைத் தலையணையில்
சற்றே கண்ணயர்ந்தான்..!
காரில் வந்த கட்டழகி
கையால் தட்டி எழுப்பி
அழைத்துச் சென்றாள்
அவள் மாளிகைக்கு..!
உஷ்ணநீர் குளிக்கக் கொடுத்து
உடுத்திக் கொள்ள துணியும் கொடுத்து
அருகில் அமர்ந்து
அறுசுவை உணவும் படைத்தாள்..!
உண்ட பின் உறங்குவதற்கு
உயர்ரக மெத்தைக் கட்டிலையும்
சுட்டிக் காட்டினாள்..!
நேரம் சென்ற பின்னும்
தூங்காது விழித்திருக்கும்
அவனை நெருங்கி
‘உண்ட பின் உறக்கம் இல்லையா?
பெண் சுகம் தேவையோ?,
சற்றே தள்ளிப் படும்,
அருகில் நான் படுக்கிறேன்’,
என்று உரைக்க
உற்சாகத்தில் ஒரு சுற்று
உருண்டு படுக்க
தடாலென விழுந்தான்
தண்ணீருக்குள்..!!
- பாளை.சுசி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.