ஏக்கம்...!
ஒரு நாள்
இரவு...
என் அருகில் நீ அமர்ந்தாய்
உன் பட்டுக்கை மென்மையை
என் மேனி உணர்ந்தது
உன் சிகப்புக் கன்னத்துச் செழுமையை
என் கைகள் உணர்ந்தன
உன் சுவாசக் காற்றின் சூட்டை
என் தோள்கள் உணர்ந்தன
உன் கூந்தல் மலரின் மணத்தை
என் நாசி உணர்ந்தது
உன்னை ஒட்டு மொத்தமாய்
நான் உணர்ந்து
என் இளமை பூரித்த போது
கொசு ஒன்று கடித்து
என் தூக்கம் கலைந்தது..!
கண்டது கனவு தான்- உறுதியானது..!
ஆனபோதிலும்
இதுவே இத்தனை இன்பமா?
என எண்ணி, மகிழ்ந்து
இனியும் வருமா? இந்தக் கனவு?
என ஏங்கி, ஏங்கி
தூங்க நினைத்தேன்-
தூக்கம் வருமா?
பகலாய்க் கழிந்தது
மீதி இரவும்..!!
- பாளை.சுசி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.