விபத்தும் இழப்பும்...?
ஊடகங்களைத் திறந்தாலே
சாலை விபத்துகளில்
மரணத்தின் அறிவிப்பு…
சுவர்கள் தோறும்
அகால மரணத்தின்
சுவரொட்டிகள்!
விபத்துகள்!
உண்மையில் விபரீதங்கள்…!
எத்தனை யெத்தனை
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தாலும்
சாலை விதிகளை
மிதிப்போரே மிகுதியாய்…!!
மாடுகள் கூட இப்போதெல்லாம்
மனிதனைப் போன்றே
ஆகிவிட்டன!
ஒலிப்பானை எவ்வளவு தான்
அழுத்தி ஒலித்தாலும்
கொஞ்சமும் அசைந்து கொடுப்பதில்லை.!!
நடைபாதையில் செல்வோர்
சாலையோர கடைகள் வீடுகளின் மீதுகூட
மோதத் துவங்கிவிட்டன வாகனங்கள்!
ஆனாலும் சாலையின் நடுவே செல்வோர்
பாதுகாப்பாகவே இருக்கின்றனர்.!!
நெரிசல் மிக்க இடங்களில்
சாலை விதிகளை
மீறுவோரைப் பார்க்கையில் தான்
தெரிகிறது…
ஓட்டுனர்களிலும்
எத்தனை மிருகங்கள்!!
விபத்துகளால் நிகழும்
இறப்புகளைக் காட்டிலும்
கைம்பெண்கள்
அநாதைகளின்
பிறப்புகளே
அதி மிகையாய்…!!
உயிரிழப்பு
உறுப்பிழப்பு
உறவின் இழப்பு
உடைமை இழப்பு
நட்பின் இழப்பென
எத்தனை யெத்தனை இழப்புகள்
தொடர்ச்சியாய்…!!
பொறுமை நிதானம் சுயநினைவு
தூக்கம் தொலைத்தவர்களால் தான்
இத்தனையும்…
ஓட்டுனர் இருக்கையில்
அமரும்முன் தம்மைச் சார்ந்தோரை
நினைக்கத் தவறுவதே காரணமோ…?
- இமாம்.கவுஸ் மொய்தீன், செங்கல்பட்டு.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.