வடிவு அக்கா
வாசல் வரை
வந்த வரன்கள்
வாய்க்காமலே
வழிமாறிப் போயின..
வாடிப் போன
வடிவு அக்கா
வாசல்படி தாண்டி வந்து
வயதான
வசந்து தாத்தாவை
வழித்துணைக்கு
வருந்தி அழைத்து
வடக்குத் தெரு போய்
வாத்தியார் வேலை செய்யும்
வரதராஜன் மாமாவை
வலுக்கட்டாயமாய்
வம்புக்கு இழுத்து
வாயில் வந்தபடி
வசை பாடி- நீர்
வரதட்சணை கேட்டதால்
வாய்க்காது போனது
வரன் எனக்கு - எனக் கூறி
வன்மையாய் கண்டித்து விட்டு
வந்த வழியே
வந்து விட்டாள், தன் வீட்டு
வாசலுக்கே..!
இன்றும் அவள் முதிர்க்கன்னி..!
- பாளை.சுசி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.